அரக்கோணம் அருகே இரவு பணி முடிந்து வீடு திரும்பிய வாலிபர் குத்திக்கொலை - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


அரக்கோணம் அருகே இரவு பணி முடிந்து வீடு திரும்பிய வாலிபர் குத்திக்கொலை - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x

அரக்கோணம் அருகே வாலிபரை கொலை செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரக்கோணம்,

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வின். ரெயில்வே துறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் இமானுவேல்(வயது23). காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இம்மானுவேல் அரக்கோணத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி அங்கிருந்து நிறுவன பஸ் மூலமாக வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் பணி முடிந்து நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் நிறுவன பஸ்சில் இருந்து அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் இறங்கி அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பழனி பேட்டை பிரதான சாலையில் மர்ம நபர் ஒருவர் இமானுவேலை கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த இம்மானுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்த உயிரிழந்த இம்மானுவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story