புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்திய வாலிபர் கைது


புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்திய வாலிபர் கைது
x

கண்டாச்சிபுரத்தில் புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்:

கண்டாச்சிபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ்சில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை வாலிபர் ஒருவர் கடத்தி வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விர்சிங் மகன் விக்ரம் சிங்(வயது 30) என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பஸ்சில் புகையிலை பொருட்களை கடத்தி சென்று கடைகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story