மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்


மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்
x

மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்.

சேலம்

கருப்பூர்:-மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்.

சேலம் டால்மியா போர்டு பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கஞ்சா விற்றதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story