வங்கி ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது


வங்கி ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
x

ஆம்பூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஆம்பூர் சுற்றுப்புற பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாரதியார் தெருவை சேர்ந்த பூபாலன் (வயது 19) என்பதும் கடந்த மாதம் அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் வங்கி ஊழியர் சவுந்தரராஜன் என்பவரது வீட்டில் நகை, பணத்தை திருடியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளும் 240 கிராம் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story