கடையின் பூட்டை உடைக்க முயன்ற வாலிபர் கைது


கடையின் பூட்டை உடைக்க முயன்ற வாலிபர் கைது
x

சிகரெட் தர மறுத்ததால் கடையின் பூட்டை உடைக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த கீழாந்துறை கிராமத்தை சார்ந்தவர் காமேஷ். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (24) என்பவர் சம்பவத்தன்று இரவு சுமார் 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த காமேஷை எழுப்பி கடையை திறந்து சிகரெட் தர சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது காமேஷ் கடையை திறக்க மறுத்ததால் ஆத்திரத்திரமடைந்த கிஷோர் குமார் நண்பர்கள் 3 பேருடன் வந்து கத்தியால் கடையின் பூட்டை உடைக்க முயன்றதாக தெரிகிறது.

இது குறித்து காமேஷ் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story