சிறுமியிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது


சிறுமியிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

சிறுமியிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள கண்டியூர் பாம்பலாயி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சசிதரன் (23), மகேந்திரன், வினோத். இவர்கள் 3 பேரும் பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் டியூசன் சென்று தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை ஆம்னி காரில் வழிமறித்து, தகாத வார்த்தைகள் கூறி திட்டி தங்களுடன் வரும்படி கூறி தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி வீட்டுக்கு சென்ற அந்த சிறுமி 3 பேர் தன்னை வழிமறித்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சசிதரன், மகேந்திரன், வினோத் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சசிதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மகேந்திரன், வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story