வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர்  சட்டத்தில் கைது
x

செங்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் அருகே உள்ள தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் என்ற செந்தில் (வயது 33).

இவர் அதே பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக செங்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தார்.

செந்தில் தொடர்ந்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து செந்திலை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story