விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி


விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
x

விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.

திருவண்ணாமலை

செங்கம்

விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.

செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் ஏரியில் விநாயகர் சிலை கரைக்கும் பணிகள் நேற்று நடந்தன. அப்போது பக்கிரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்ற சதீஷ் நண்பர்களுடன் கரைப்பதற்காக தண்ணீரில் இறங்கினார். அப்போது அவர் நீரில் மூழ்கினார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் அவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்தபோது சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story