தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு


தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

குடியரசு தின விழாவையொட்டி கோவையில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


குடியரசு தின விழாவையொட்டி கோவையில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலெக்டர் சமீரன் தேசிய கொடி ஏற்றுகிறார்.

விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க கோவை விமான நிலையம், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் ஏராளமான பார்சல்கள் அனுப்பப்படுகிறது.

நேற்று காலை கோவை மாநகர போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கோவை ரெயில் நிலையத்தில் சோதனை செய்தனர்.

அப்போது ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்கள், அங்கு நிறுத் தப்பட்டிருந்த கார்களில் மோப்பநாய் மூலம் வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா? என்று சோதனை செய்தனர்.

இதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்காலிக சோதனை சாவடிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை, வடகோவை, போத்தனூர் ஆகிய ரெயில்வே நிலையங்கள், முக்கிய பஸ் நிலை யங்களில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

முக்கி வழக்கில் தொடர்புடைய நபர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் மாநகரில் முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகனசோதனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கோவை-கேரள எல்லைகள் உள்பட 16 இடங்களில் உள்ள சோதனை சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story