எண்ணெய் மில்லில் பயங்கர தீ


எண்ணெய் மில்லில் பயங்கர தீ
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எண்ணெய் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள முத்துலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் மில் (ஆயில் மில்) ஒன்று உள்ளது. இந்த மில்லில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி சாமி தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்றனர். 2 மணி நேரம் போராடி தீயை அவா்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story