மோட்டார் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி தீப்பிடித்ததில் என்ஜினீயர் பலியானார்.


மோட்டார் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி தீப்பிடித்ததில் என்ஜினீயர் பலியானார்.
x

காவேரிப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி தீப்பிடித்ததில் சென்னையை சேர்ந்த என்ஜினீயர் உடல்கருகி பலியானார்.

ராணிப்பேட்டை

டிப்பர் லாரி மோதல்

செங்கல்பட்டு சின்ன கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 38), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் செங்கல்பட்டில் இருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிக்கு டிப்பர் லாரியை ஓட்டி வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் டிப்பர் லாரியின் முன்பகுதியில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இந்த விபத்தில் பெட்ரோல் கசிந்து லாரியில் தீப்பற்றிக் கொண்டது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. இதில் வாலிபர் உடல் முழுவதும் தீ பரவி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிப்பர் லாரியின் முன் பகுதியும் எரிந்து நாசமானது.

என்ஜினீயர்

டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தீயில் கருகி உயிரிழந்த வாலிபர் சென்னை மாம்பாக்கத்தை சேர்ந்த ரவீந்திரன் மகன் மனுகாஷ்யப் (22) என்பதும், தனியார் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.


Next Story