ஆட்டோவில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஆட்டோவில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

பொன்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆட்டோவில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி கடத்தியதாக பெண்உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

ரேஷன் அரிசி கடத்தல்

பொன்னை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பொன்னை சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பொன்னையை அடுத்த ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் முனிசாமி (வயது 52) மற்றும் வள்ளிமலையை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா (42) ஆகியேர் சுமார் 1 டன் ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக ஆட்டோவில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்திசென்றனர்.

பெண் உள்பட 2 பேர் கைது

ஒட்டனேரி கூட்ரோடு அருகே ஆட்டோவை மடக்கி பிடித்து கடத்த முயன்ற ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி கடத்திய முனிசாமி, மஞ்சுளா ஆகிய இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ, அரிசியையும் வேலூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் வழக்குப்பதிவு செய்து முனிசாமி, மஞ்சுளா ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story