சாலையோர மின்கம்பத்தில் மோதிய சுற்றுலா வாகனம்
மண்டபத்தில் சாலையோர மின்கம்பத்தில் சுற்றுலா வாகனம் மோதியது.
பனைக்குளம்,
தூத்துக்குடி பகுதியில் இருந்து சுற்றுலா வாகனம் ஒன்றில் 5-க்கும் மேற்பட்டோர் ராமேசுவரம் வந்துள்ளனர். இந்த சுற்றுலா வாகனத்தை தூத்துக்குடி பகுதியை சேர்ந்த டிரைவர் லெகன் (வயது 34) என்பவர் ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு மண்டபம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்த சுற்றுலா வாகனம் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது வேகமாக மோதி உள்ளது. இதில் மின் கம்பம் முழுமையாக சரிந்து விழும் நிலையில் வளைந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் டிரைவர் உள்ளிட்டோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள் இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து கிரேன் உதவியுடன் மின்கம்பத்தின் மீது மோதி நின்ற சுற்றுலா வாகனம் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மண்டபம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.