செஞ்சி அருகே டவுன் பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு


செஞ்சி அருகே டவுன் பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே டவுன் பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கல்லடிக்குப்பம் கிராமத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு டவுன் பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் மாலை விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அணிலாடி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. அப்போது பஸ்சின் வலதுபுற பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த தகரம் திடீரென கழன்று சாலையில் விழுந்தது. இதை உணர்ந்த பஸ் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார்.

அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மற்றும் மாணவர்கள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் இச்சம்பவம் குறித்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மாற்றுப்பஸ்சில் விக்கிரவாண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story