கோவில் மீது டிராக்டர் மோதி விபத்து


கோவில் மீது டிராக்டர் மோதி விபத்து
x

வாணியம்பாடி அருகே கோவில் மீது டிராக்டர் மோதியதில் தூண் உடைந்து விழுந்து ஒருவர் பலியானார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 48). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் படுத்திருந்தார். அப்போது அதேப்பகுதியில் இருந்து பேவர் பிளாக் கல்லை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சங்கரபுரம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சக்கரவர்த்தி (48) என்பவர் ஓட்டி சென்றார்.

அப்போது மாரியம்மன் கோவில் தூண் மீது டிராக்டர் மோதி தூண் உடைந்து அங்கு படுத்திருந்த கந்தசாமி மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமியை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இச்சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சக்கரவர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story