போலீசுக்கு பயந்து டிராக்டர் டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை
போலீசுக்கு பயந்து டிராக்டர் டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசுக்கு பயந்து டிராக்டர் டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம், இவரது மகன் மணி (வயது 20) டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மாதனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் பாட்டி வீட்டுக்கு மணி அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில் அந்த மாணவியை மணி ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
கிராமத்திலுிரு்து மாணவி மாதனூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அதனை அறிந்த மணி குருவராஜ பாளையம் வந்ததும் மாணவியை கீழே இறங்கும்படி வற்புறுத்தி உள்ளார். அதற்கு அந்த மாணவி இறங்காததால் பஸ்ஸிலேயே மாணவியை தாக்கி உள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் எல்லப்பம்பட்டி கிராமத்திற்கு சென்று மணியின் பெற்றோரிடம் இதுகுறித்து கூறி விசாரணைக்கு வரும்படி கூறியுள்ளார். இதை அறிந்த மணி பள்ளி குப்பத்தில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றார். பாட்டி சரோஜாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்குள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியின் பின்பக்கம் உள்ள வேப்பமரத்துகிளையில் தூக்கு போட்டுக்கொண்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் அங்கு சென்றபோது மணியின் உறவினர்கள் உடலைத் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு சமரசப்படுத்தி மணி உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மணி சாவு குறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.