தண்டவாளத்தில் தலை வைத்து வியாபாரி தற்கொலை


தண்டவாளத்தில் தலை வைத்து வியாபாரி தற்கொலை
x

தண்டவாளத்தில் தலை வைத்து வியாபாரி தற்கொலை

கோயம்புத்தூர்

கோவை, ஜூலை

கோவை-போத்தனூர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியாக சென்றவர்கள் இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்தவர் கோவை தெற்கு உக்கடம் 2-வது வீதியை சேர்ந்த அப்துல் காதர் (வயது 44) என்பதும், தள்ளு வண்டியில் வைத்து செருப்பு வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

சம்பவத்தன்று அப்துல் காதர் தனது குடும்பத்துடன் திருப்பூருக்கு திருமணத்துக்கு சென்றார். பின்னர் அங்கு இருந்து தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கோவை திரும்பினார்.

அப்போது வீட்டில் அப்துல் காதர் டி.வி பார்த்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து தனது மகனிடம் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாக அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் தான் அப்துல் காதர் கோவை-போத்தனூர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story