போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்


போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்
x

வந்தவாசியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வந்தவாசி வட்டாரக்குழு சார்பில் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிதியளிப்பு பேரவை கூட்டம் நடந்தது.

வட்டார செயலாளர் எ.ஆரிப் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வி.சுப்பிரமணி, ஆர்.நாராயணன், ஈ.சுப்பிரமணி, எம்.சாந்தி, எஸ்.மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் எ.ரகமத்துல்லா வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் இரா.தங்கராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் வே.முத்தையன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் வந்தவாசி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வந்தவாசியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

வந்தவாசி கோட்டையை புனரமைத்து சுற்றுலாத்தலமாக்க வேண்டும். நகரில் பழுதாகியுள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை குடிநீர் தொட்டிகளை சீரமைக்க வேண்டும்.

நகரில் தெரு மின்விளக்குகள் சரிவர எரியாதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story