வடலூரில் மின்மாற்றி வெடித்தது


வடலூரில் மின்மாற்றி வெடித்தது
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் மின்மாற்றி வெடித்தது மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி

கடலூர்

வடலூர்

வடலூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள மின்மாற்றி நேற்று இரவு 7 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் கரும்புகையுடன் தீப்பிழம்பு உருவானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்மாற்றி வெடித்து சிதறியதால் வடலூர் போலீஸ்நிலையம், நகராட்சி அலுவலகம், வடலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் அந்த பகுதிகள் இருளில் மூழ்கின. இதுபற்றிய தகவல்அறிந்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மாற்று மின் மாற்றியை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில பகுதிகளுக்கு அருகில் உள்ள மின் மாற்றிகளில் இருந்து இணைப்பை மாற்றி மின் வினியோகம் செய்தனர். வடலூர் பகுதியில், வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்ற நேரத்தில் திடீர் மின்வெட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story