கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில்மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு, மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று மதியம் 1 மணியளவில் மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கள்ளக்குறிச்சி மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின் ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்து, தீயை அணைத்தனர். மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள சாலையில் இருந்த மின்மாற்றி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story