மரக்கிளை முறிந்து விழுந்து தந்தை, மகன் படுகாயம்


மரக்கிளை முறிந்து விழுந்து தந்தை, மகன் படுகாயம்
x
தினத்தந்தி 18 Jun 2023 11:34 PM IST (Updated: 19 Jun 2023 12:57 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே மரக்கிளை முறிந்து விழுந்து தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர்.

ராணிப்பேட்டை

காஞ்சீபுரம் மாவட்டம், பெருநகர் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 66). அவரது மகன் குமார் (33). இவர்கள் இருவரும் நேற்று பனப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் காஞ்சீபுரத்திற்கு திருமால்பூர் வழியாக சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அந்தப்பகுதியில் மதியம் மூன்று மணியளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துகொண்டிருந்தது. இதனால் திருமால்பூர் சுடுகாடு அருகே மகாதேவன், குமார் ஆ௳ியோர் சென்றபோது ஆலமரக்கிளை முறிந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் தந்தை, மகன் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story