சூறைக்காற்றில் மரக்கிளை முறிந்து மின்கம்பம் மீது விழுந்தது
விக்கிரமசிங்கபுரத்தில் சூறைக்காற்றில் மரக்கிளை முறிந்து மின்கம்பம் மீது விழுந்தது.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பழமையான மருதமரத்தின் கிளைகள் நேற்று மாலை திடீெரன்று வீசிய சூறைக்காற்றில் முறிந்து அருகில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் விஜயராஜ், ஆக்னஸ் சாந்தி மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர் வந்து மரக்கிளைளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ேமலும் 4 மணி நேரம் மின்தடையும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story