சென்னையில் மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு


சென்னையில் மரம் விழுந்து ஒருவர் உயிரிழப்பு : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
x

ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, அயனாவரம் வட்டம், பெரவள்ளூர் கிராமம், ஜி.கே.எம். காலனி, 26-வது கென்னடி தெருவைச் சேர்ந்த சாதிக் பாஷா (வயது54) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மரம் விழுந்ததால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி 3.1.2023 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story