சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் நெடுஞ்சாலையில் மரம் விழுந்தது


சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் நெடுஞ்சாலையில் மரம் விழுந்தது
x

வந்தவாசி அருகே சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் நெடுஞ்சாலையில் மரம் விழுந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள அம்மையப்பட்டு, சத்தியா நகர், மும்முனி, பாதிரி, வெண்குன்றம், சென்னாவரம், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் வந்தவாசி -திண்டிவனம் செல்லும் நெடுஞ்சாலையில் இளங்காடு கூட்டுச் சாலையில் பெரிய புளியமரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல் துறையினர் அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதை வழியாக திருப்பி அனுப்பினர்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் வந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மரத்தினை அப்புறப்படுத்தினர்.

இதனால் வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story