சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஆனைமலை-பொள்ளாச்சி இடையே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது ஆனைமலை பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஆனைமலை-பொள்ளாச்சி சாலையின் குறுக்கே நேற்று காலை மரம் ஒன்று விழுந்தது. இதில் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வானங்களில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
Related Tags :
Next Story