நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்தது


நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்தது
x

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் நேற்று மாலையில் பலத்த காற்று வீசியது. அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையோரத்தில் உள்ள மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பணியாளர்கள் அங்கு சென்று, அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. மரம் விழுந்தபோது அந்த வழியாக யாரும் செல்லவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

1 More update

Next Story