கல்வெட்டு ஆராய்ச்சியாளா் உருவப்படத்திற்கு அஞ்சலி
கல்வெட்டு ஆராய்ச்சியாளா் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூர்
தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான புலவர் ராசு நேற்று காலை இறந்து விட்டார். இதனையொட்டி கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் புலவர் ராசுவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையொட்டி கரூர் மனோகரா கார்னர் அருகே உள்ள காமராஜர் உருவச்சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ராசுவின் உருவப்படத்திற்கு கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்கத்தின் செயலாளர் செல்லத்துரை தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பொருளாளர் பாலு, மணிராம், தங்கராஜ், ஆனந்த், சிவசாமி, முத்துசாமி, ராமலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டு ராசுவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story