வெங்காய மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது
வெங்காய மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கரூர்
மாராட்டிய மாநிலம், சோலாப்பூரில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றி கொண்டு திருநெல்வேலியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நேற்று காலை அரவக்குறிச்சி அருகே உள்ள கணவாய் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் அனைத்தும் சாலையில் விழுந்தன. இதில் லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 30) சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து மாற்று லாரியில் அந்த வெங்காய மூட்டைகள் ஏற்றப்பட்டு திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story