மின் கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து


மின் கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து
x

விழுப்புரத்தில் மின் கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்;

விழுப்புரத்தில் இருந்து இன்ற காலை புதுச்சேரி மார்க்கமாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி, விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் சென்றபோது திடீரென அங்குள்ள சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்த மின்கம்பம் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் லாரி டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பிறகு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அந்த லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மின்வயர்களை சரிசெய்து அப்பகுதியில் சீரான மின் வினியோகம் செய்ய மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.


Next Story