பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி


பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி
x

விழுப்புரம் கே.கே.நகர் பகுதியில் பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியது.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட கே.கே.நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன. இந்த பள்ளங்களில் தற்காலிக சீரமைப்பு பணிக்காக மண் கொட்டப்பட்டது. ஆனால் தொடர்ந்து தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளவில்லை. மேலும் பள்ளங்களில் மண்ணை சரியாக கொட்டி சீரமைக்கவில்லை. இதனால் சாலையில் ஆங்காங்கே மெகா சைஸ் பள்ளங்கள் காணப்படுகின்றது. இந்நிலையில் கே.கே.நகர் சீனிவாசா மண்டபம் அருகில் நேற்று காலை கட்டுமான பணிக்காக ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று, அங்கு தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அந்த லாரி தலைகீழாக கவிழும் நிலையில் நின்றது. இதனையடுத்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அந்த லாரி மீட்டெடுக்கப்பட்டது. எனவே பாதாள சாக்கடை பள்ளங்களை சரியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story