விழுப்புரம் அனிச்சம்பாளையம் சாலையில் சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்பு


விழுப்புரம் அனிச்சம்பாளையம் சாலையில்   சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்பு
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அனிச்சம்பாளையம் சாலையில் சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரியை பொதுமக்கள் மீடடனர்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன. இந்த பள்ளங்களில் சீரமைப்பு பணிக்காக மண் கொட்டப்பட்டது.

ஆனால் தார் சாலைப்பணியை விரைந்து மேற்கொள்ளாமல் தற்காலிகமாக கொட்டப்பட்ட மண்ணை, சரியாக கொட்டி சீரமைக்காததால் சாலையில் மெகா சைஸ் பள்ளங்கள் காணப்படுகின்றது. தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் அந்த சாலைகள் சேறும், சகதியுமாக படுமோசமாக மாறியுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் அனிச்சம்பாளையம் சாலையில் ரேஷன் கடைகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று நேற்று மாலை அங்கு தோண்டப்பட்ட பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அந்த லாரி தலைகீழாக கவிழும் நிலையில் நின்றது. லாரி எந்தநேரத்திலும் கவிழ்ந்து விடுமோ என நினைத்து அவ்வழியாக நடந்து செல்லவே பொதுமக்கள் பீதியடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அந்த லாரியை, பள்ளத்தில் இருந்து மீட்டெடுத்தனர். எனவே பாதாள சாக்கடை பள்ளங்களை சரியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story