திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.25 லட்சத்தில் பெண்களுக்கான கழிப்பறை மற்றும் உடைமாற்றும் அறை கொண்ட வாகனம்


திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.25 லட்சத்தில் பெண்களுக்கான கழிப்பறை மற்றும் உடைமாற்றும் அறை கொண்ட வாகனம்
x

திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.25 லட்சத்தில் பெண்களுக்கான கழிப்பறை மற்றும் உடைமாற்றும் அறை கொண்ட வாகனம் உபயமாக வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரக்கூடிய பெண் பக்தர்களின் வசதிக்காக சென்னை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் நடமாடும் கழிப்பறை மற்றும் உடை மாற்றும் வாகனம் உபயமாக வழங்கப்பட்டது. இந்த கழிப்பறை வாகனத்தில் இரு புறங்களிலும் 8 கழிப்பறைகள் மற்றும் 2 உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கழிப்பறை வாகனம், பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு வெளியே வரக்கூடிய வடக்கு வாசல் எதிர்புறம் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கழிப்பறை வாகனத்தை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள், கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் உபயமாக வழங்கினர்.

நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள் நாகராஜன், சக்திவேல், கணேசன், அசோகன், சாய்சிவா, ராஜ்பிரகாஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story