மலைவாழ் மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் நடனம் ஆடிய வீடியோ வைரலானது
மலைவாழ் மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் நடனம் ஆடிய வீடியோ
ஜோலார்பேட்டை
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் மலைவாழ் மக்களின் மகளிர் சுய உதவி குழு சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது.
அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கோவில் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன் தலைமை தாங்கினார்.
விழாவில் மகளிர் சுய உதவி குழுவை ேசர்ந்த 250-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தனித் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, நடன போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
வெற்றி பெற்ற மகளிருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகள் வழங்கினார். அதன் பிறகு மகளிர் குழுவினர் இணைந்து மேடையில் நடனம் ஆடினர்.
அப்போது தலைமை பொறுப்பு ஏற்க வந்த ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் ஆர்வத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து நடமாடினார். இதனை பார்த்த அனைவரும் ஆரவாரம் செய்தனர். மலைவாழ் மக்களடன் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர் நடனம் ஆடிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.