விஷ வண்டு கடித்து கிராம நிர்வாக அதிகாரி பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ வண்டு கடித்து கிராம நிர்வாக அதிகாரி பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ வண்டு கடித்து கிராம நிர்வாக அதிகாரி பலியானார்.
விஷ வண்டு கடித்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள முல்லைநகர் புதுத்தெருவை சேர்ந்தவர் இந்திராகாந்தி(வயது 54). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
முல்லை நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என பார்ப்பதற்காக அவர் மாடிக்கு சென்றார். அப்போது இந்திரா காந்தியை விஷ வண்டு கடித்தது. இதையடுத்து அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கிராம நிர்வாக அதிகாரி பலி
பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.