சமூக சேவைக்காக பணியை ராஜினாமா செய்த கிராம நிர்வாக அலுவலர்


சமூக சேவைக்காக பணியை ராஜினாமா செய்த கிராம நிர்வாக அலுவலர்
x

சமூக சேவைக்காக கிராம நிர்வாக அதிகாரி பணியை ராஜினாமா செய்தார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை டவுன் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் பிரிதிவிராஜ். இவர் இறுதியாக கள்ளகாரி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். 13 ஆண்டுகள் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த அவர் பல சமூக சேவைகளையும் செய்து வந்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விருதும் பெற்றுள்ளார். இந்தநிலையில் திடீரென கிராம நிர்வாக அலுவலர் பிரிதிவிராஜ் தனது அரசு பதவியை ராஜினாமா செய்வதற்காக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார். அரசு பதவியை துறந்து சமூகப்பணியில் ஈடுபட உள்ளேன் என அவர் கூறினார்.


Next Story