நூலக கட்டிடத்தை இடிக்கும்போது சுவர் விழுந்து ெபண் படுகாயம்


நூலக கட்டிடத்தை இடிக்கும்போது சுவர் விழுந்து ெபண் படுகாயம்
x

நூலக கட்டிடத்தை இடிக்கும்போது சுவர் விழுந்து ெபண் படுகாயம் அடைந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

நூலக கட்டிடத்தை இடிக்கும்போது சுவர் விழுந்து ெபண் படுகாயம் அடைந்தார்.

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள பழைய நூலக கட்டிடத்தை பொக்லைன் மூலம் இடிக்கும் பணி நடந்தது. அங்கு அதே பகுதியை சேர்ந்த ஜலேந்திரனின் மனைவி கங்கம்மாள் (வயது 55) மீது எதிர்பாராத விதமாக நூலக கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி நெற்றியில் பலத்த காயம் அடைந்த கங்கம்மாவை அங்கிருந்தவர்கள் உடனே மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story