தங்கப்பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உற்சாக வரவேற்பு


தங்கப்பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு  உற்சாக வரவேற்பு
x

தங்கப்பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான மேலப்புலியூரை சேர்ந்த கலைச்செல்வன், மங்களமேட்டை சேர்ந்த அம்பிகாபதி, ஆதனூரை சேர்ந்த பள்ளி மாணவர் ஜீவா ஆகியோர் ஏற்கனவே மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று, அசாம் மாநிலம், கவுகாத்தியில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தமிழக அணிக்காக பங்கேற்றனர். இதில் அம்பிகாபதி 2 தங்கப்பதக்கங்களும், ஒரு வெள்ளிப்பதக்கமும், கலைச்செல்வன் தலா ஒரு தங்கம், வெள்ளிப்பதக்கமும் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். ஜீவா நான்காவது இடம் பிடித்தார். பதக்கங்களை பெற்று பெரம்பலூர் திரும்பிய அவர்களுக்கு புதிய பஸ் நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சுய உதவி குழு கூட்டமைப்புகளின் நலவாழ்வு சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகள் துறை, பள்ளிக்கல்வித்துறை, பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தினர் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுடன் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரம்யா நீச்சல் போட்டிகளில் தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story