தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு கல்வித்துறை சார்பில் மகளிர் இளையோர் கால்பந்து போட்டி தர்மபுரியில் நடைபெற்றது. இப்போட்டியில் மன்னார்குடி சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வெற்றனர். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மாணவிகளை பாராட்டி பிளக்ஸ் பேனர் வைத்து வாணவேடிக்கையுடன் ஆரத்தி எடுத்து ஊர்வலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் வனிதா அருள்ராஜன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நாகஜோதி மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மாணவிகளுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டத