நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருக்கு உற்சாக வரவேற்பு


நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
x
திருநெல்வேலி

அம்பை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பனுக்கும், தலைமை செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிரபாகரனுக்கும் அம்பை நகர தி.மு.க. சார்பில், நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான கே.கே.சி.பிரபாகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராமசாமி, நகரசபை துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், பள்ளக்கால் பஞ்சாயத்து தலைவர் ராம்சந்துரு, இளைஞர் அணியைச்சேர்ந்த தினகரன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் இரா.ஆவுடையப்பனுக்கு வீரவநல்லூர் நகர செயலாளர் சுப்பையா தலைமையில், கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, துணைத்தலைவர் வசந்தகுமாரி, ஓய்வுபெற்ற தாசில்தார் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் முத்துகுமார், கல்பனா, சின்னத்துரை, சண்முகவேல், கெங்கா ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story