பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த காவலாளி


பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த காவலாளி
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் காவலாளி இறந்து கிடந்தார்.

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 67). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை வந்தார். பின்னர் இவர் சிங்காநல்லூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு பணி முடிந்து காலையில் வீடு திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவர் 2 நாட்களாக வெளியே வரவில்லை.

இந்த நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தாமோதரன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தாரா?, தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story