மின்வேலியில் சிக்கி காட்டு மாடு பலி


மின்வேலியில் சிக்கி காட்டு மாடு பலி
x

கண்ணமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு மாடு இறந்தது. அதனை புதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு மாடு இறந்தது. அதனை புதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மின்வேலியில் சிக்கி பலி

கண்ணமங்கலம் அருகே சந்தவாசல் வனச்சரக எல்லைக்குட்பட்ட கல்வாசல் கிராமம் கொள்ளைமேடு பகுதியில் காட்டு மாடு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக சந்தவாசல் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்று வனச்சரகர் சக்திவேல் தலைமையில், வனவர் சுப்பிரமணியம், வனக்காப்பாளர் ராஜ்குமார் மற்றும் வன பணியாளர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை செய்தனர்.

விசாரணையில் கல்வாசல் கிராமம், கொல்லைமேடு பகுதியை சார்ந்த சம்பத் என்பவர் தனது விவசாய நிலத்தை சுற்றி திருட்டுத்தனமாக அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின் இணைப்பு பெற்று மின்வேலி அமைத்து இருந்தார்.

இதில் அங்கு மேய்ச்சலுக்கு வந்த காட்டு மாடு ஒன்று சிக்கி இறந்துள்ளது.

2 பேர் கைது

சம்பத் இதை மறைத்து கேளூர் கிராமத்தைச் சார்ந்த ராஜ்கமல் என்பவர் மூலம் பொக்லைன் எந்திரத்தை கொண்டு குழிதோண்டி காட்டு மாட்டை புதைத்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி, கோட்ட உதவி வனபாதுகாவலர் வினோத் ராஜ் தலைமையில் புதைக்கப்பட்டிருந்த காட்டு மாடு தோண்டி எடுக்கப்பட்டு சந்தவாசல் அரசு கால்நடை உதவி மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் மின்சாரம் தாக்கி மாடு இறந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து சம்பத், ராஜ்கமல் ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் மாடு புதைக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story