காரமடை அருகே விவசாய தோட்டத்தில் காட்டு யானை முகாம்-கம்பிவேலிகளை மிதித்து சேதப்படுத்தியது


காரமடை அருகே விவசாய தோட்டத்தில் காட்டு யானை முகாம்-கம்பிவேலிகளை மிதித்து சேதப்படுத்தியது
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானை கம்பிவேலிகளை மிதித்து சேதப்படுத்தியது.

கோயம்புத்தூர்

காரமடை

காரமடை அருகே விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானை கம்பிவேலிகளை மிதித்து சேதப்படுத்தியது.

காட்டு யானை

கோவை மாவட்டம் காரமடை வனச்சரத்திற்குட்பட்ட பகுதியான ஆதிமாதையனூர், சுண்டகரை, கிராமங்கள் மலை அடிவார பகுதியாகும். இங்கு இரவு நேரத்தில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானை ஒன்று கடந்த 2 தினங்களாக அப்பகுதியில் நடமாடி வருகிறது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் வனத்துறையினர் யானையை விரட்ட முயன்றனர். அப்போது யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் நேய்வாய் பட்டுள்ளது தெரியவந்தது. யானையை வனத்துறையினர் அடர் வனத்தில் விரட்டியடிக்க பட்டாசுகள் வெடித்து முயற்சித்தனர். இருப்பினும் யானை உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதால் யானை நடக்க முடியாமல் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது.

வனத்துறையினர் கண்காணிப்பு

யானை அருகில் உள்ள தக்காளி பயரிட்டிருந்த விவசாய நிலங்களில் புகுந்து அதனை உட்கொண்ட போது யானையால் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டது. இதனால் வனத்துறையினர் தர்ப்பூசணி மற்றும் வாழைப்பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர் அதையும் யானை உட்கொள்ள முடியவில்லை. இதனையடுத்து யானையை அருகில் உள்ள வனப்பகுதியினுள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர் இதனால் கோபமடைந்த யானை அங்கு இருந்து விவசாய தோட்டத்தின் வேலியை மிதித்து சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்தவர்களையும் துரத்தியது. இதனால் அனைவரும் ஓடி சென்று தப்பினர்.

தற்போது வரை விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில் காயம் பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வனத்திற்குள் விரட்ட அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story