வனத்துறை ஊழியர்களை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு


வனத்துறை ஊழியர்களை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Jun 2023 2:00 AM IST (Updated: 14 Jun 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வனத்துறை ஊழியர்களை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பழங்கள் காய்த்து குலுங்குகிறது. பலாப்பழ சீசன் காரணமாக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் பர்லியார் பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை மலை ரெயில் பாதையில் முகாமிட்டது. பின்னர் வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்தநிலையில் மலை ரெயில் பாதையில் மீண்டும் ஒற்றை காட்டு யானை நடமாடி வருகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை 12, 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் உலா வந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விரட்டினர். அப்போது காட்டு யானை திடீரென வனத்துறை ஊழியர்கள் 2 பேரை விரட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி, காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் வழிவகை செய்தனர். தொடர்ந்து யானை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


Next Story