காரை சேதப்படுத்திய காட்டு யானை


காரை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அருகே காரை காட்டு யானை சேதப்படுத்தியது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நவமலை, சின்னார்பதி உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கேரளாவில் இருந்து வந்த சுள்ளி கொம்பன் என்ற காட்டு யானை உலா வருகிறது. கடந்த வாரம் ஆழியாறு பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானை 50-க்கும் மேற்பட்ட தென்னையை சேதப்படுத்தியது. இதனால் காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கேரளா மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்த அஜிஸ் டேனியல், வால்பாறையில் டைல்ஸ் ஓட்டும் வேலையை முடித்துவிட்டு தனது நண்பர்கள் 3 பேருடன் சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். சித்தர் பாலம் அருகே வந்தபோது, திடீரென காரை வழிமறித்த சுள்ளி கொம்பன் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் மற்றொரு காரையும் காட்டு யானை சேதப்படுத்தியது. பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றதால், காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story