வீட்டின் கதவுக்குள் துதிக்கையை விட்டு உணவு தேடிய காட்டு யானை
வீட்டின் கதவுக்குள் துதிக்கையை விட்டு காட்டு யானை உணவு தேடியது
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவை, அவ்வப் போது குடிநீர் மற்றும் உணவை தேடி அருகில் உள்ள கிராம பகுதிக்கு வந்து பயிர்கள மற்றும் பொருட்களை சேதப்படுத்து கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் கோவை பன்னிமடை அருகே கதிர்நாயக் கன்பாளையத்தில் ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அது அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.
அதை பார்த்து அந்த வீட்டில் இருந்த நாய் குரைத்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தனர். அவர்கள் வீட்டின் முன்பு யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் கூச்சலிட்டனர். ஆனாலும் யானை அங்கே நின்று வீட்டின் கதவுக்குள் துதிக்கையை விட்டு உணவுப் பொருட்கள் ஏதும் கிடைக்கிறதா என்று தேடியது. ஆனால் எதுவும் கிடைக்க வில்லை.
இதையடுத்து யானை அட்டகாசம் செய்யாமல் அங்கி ருந்து புறப்பட்டு சென்றது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஊருக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.