மதுபானக்கூடத்தை சூறையாடிய காட்டு யானை
ஆனைக்கட்டி அருகே மதுபானக்கூடத்தை காட்டு யானை சூறையாடின
கோயம்புத்தூர்
கோவையை அடுத்த ஆனைக்கட்டி மலை பகுதியில் காட்டு யானைகள் அதிகம் உள்ளன. அவை உணவு தேடி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் வனவிலங்கு-மனித மோதலும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாங்கரை சோதனை சாவடி அருகே காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை சோதனைச்சாவடி தடுப்புகளை மிதித்து சேதப்படுத்தியது.அதன்பிறகு அங்கு டாஸ்மாக் கடையின் அருகே இருந்த மது பான கூடத்துக்குள் (பார்) புகுந்து பொருட்களை சேதப்படுத்தி சூறையாடியது.
வழக்கமாக அந்த மதுபானக்கூடத்தில் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்பட வில்லை. ஆனாலும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருக்கும் மதுபானக் கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story