ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை


ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை
x
தினத்தந்தி 14 May 2023 2:00 AM IST (Updated: 14 May 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கேரள வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதி குடியிருப்புக்குள் காட்டு யானை புகுந்தது. அங்கிருந்த ரேஷன் கடை சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் உள்ளே இருந்த ரேஷன் அரிசியை தின்றது. மேலும் மற்ற பொருட்களை காட்டு யானை சூறையாடியது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.


Next Story