வால்பாறையில் ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை-தோட்டத்தில் புகுந்ததால் வாழைகள் நாசம்
வால்பாறையில் ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை அந்தப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்ததால் வாழைகள் நாசம் செய்தது.
வால்பாறை
வால்பாறையில் ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை அந்தப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்ததால் வாழைகள் நாசம் செய்தது.
ஒற்றை யானை
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் தொடர்ந்து காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கலியாணபந்தல் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
நேற்று அதிகாலையில் பச்சை மலை எஸ்டேட் வனப் பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்து சென்று நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்தது.
ரேஷன் கடை சூறை
தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு நடுவில் அமைந்துள்ள தாழம்பூ மகளிர் சுய உதவிக் குழு ரேஷன் கடையை சூறையாடியதோடு, கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்துள்ளது.
ஆனால் உடைந்த கதவு வழியாக யானையால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் உடைந்த கதவு வழியாக துதிக்கையை உள்ளே விட்டு கடைக்குள் சிதறி கிடந்த அரிசியை எடுத்து தின்றது.மேலும் குடியிருப்பு பகுதியில் உளள தோட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்த வாழைகளை நாசம் செய்தது.
தற்போது அந்த ஒன்றை யானை பச்சை மலை எஸ்டேட் வனப் பகுதிக்குள் முகாமிட்டு உள்ளது.
கண்காணிப்பு
இதனால் நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பச்சை மலை எஸ்டேட் பகுதி தொழிலாளர்கள் இரவில் மீண்டும் குடியிப்புக்குள் யானை நுழைந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
வால்பாறை வனத்துறையினர் நடுமலை எஸ்டேட் பச்சை மலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.