ஓவேலியில் ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்-கார், மோட்டார் சைக்கிளை சேதம்


ஓவேலியில் ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்-கார், மோட்டார் சைக்கிளை சேதம்
x
தினத்தந்தி 27 May 2023 12:30 AM GMT (Updated: 27 May 2023 12:30 AM GMT)

ஓவேலியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார், மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியது.

நீலகிரி

கூடலூர்

ஓவேலியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார், மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியது.

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர். ஓ வேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் காட்டு யானை ஒன்று கிளன் வன்ஸ் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானையும் பொதுமக்களை விரட்டியவாறு இருந்தது.

கார்- மோட்டார் சைக்கிள் சேதம்

இந்த சமயத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் பரபரப்பு காணப்பட்டது. மேலும் பெண்கள் குழந்தைகள் காட்டு யானையை கண்டு வீட்டுக்குள் ஓடி பதிங்கி கொண்டனர்.

தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story