ஆசனூர் அருகே சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரியில் கரும்பை தேடிய காட்டு யானை
ஆசனூர் அருகே சிலிண்டர் ஏற்றிச்சென்ற லாரியில் கரும்பை தேடிய காட்டு யானை
ஈரோடு
தாளவாடி
சத்தியமங்கலத்தில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தாளவாடிக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஆசனூர் அருகே சென்றபோது ரோட்ேடாரம் நின்றிருந்த காட்டு யானை ஒன்று ஓடி வந்து லாரியை வழிமறித்தது. இதனால் டிரைவர் லாரியை நிறுத்தினார். இதன் காரணமாக அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பின்னர் யானை லாரியில் கரும்புகள் இருக்கிறதா? என தேடி பார்த்தது. ஆனால் கரும்புகள் இல்லாததால் யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்றது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
Related Tags :
Next Story